Total Pageviews

Wednesday, September 19, 2012

அருள்மிகு கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் திருக்கோவில். வில்லியனூர்

அருள்மிகு கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் திருக்கோவிலில் திருப்பணி செய்யும் பாக்கியம் நமது குழுவிற்கு இறையருளால் கடந்த ஞாயிற்றுகிழமை (16.09.2012) அன்று கூடியது. பாண்டிச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில், பாண்டியில் இருந்து 10 km தொலைவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.


இத்திருக்கோவிலின் சிறப்புகள் :    கோயில்களில் தீபாராதனையின் போது "ஓம் ராஜாதி ராஜாயப்ரசஹ்ய ஸாகினே' என்ற மந்திரம் கூறி தீபாராதனை காட்டுவார்கள். இந்த மந்திரத்தில் "காமேஸ்வரோ'  என்ற வார்த்தை வரும். இவரை தரிசிக்க வேண்டுமானால் புதுச்சேரி அருகிலுள்ள வில்லியனூர் கோகிலாம் பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோயிலுக்கு செல்ல வேண்டும். எந்தக்கோயிலில் இறைவனை வழிபட்டாலும் அதில் காமேஸ்வரரின் திருநாமம் உச்சரிக்கப்படும்.(நன்றி: தினமலர் )

1200 வருடங்களுக்கு மேற்பட்ட பழமையான கோவில்.  சுயம்புவான சிவலிங்கத்திருமேனி மண்ணால் உருவானது. எனவே, இங்கு அபிஷேகம் செய்யும்போது ஒரு லிங்க வடிவிலான செப்புப்பாத்திரத்தை சுயம்பு திருமேனியின் மீது கவிழ்த்து , அதன் மீது அபிஷேக வழிபாடு செய்யப்படுகிறது.

இந்திரன், மன்மதன், நாசிங்கமுர்த்தி, பிரம்மா, சூரியன், சந்திரன்,ஆதிசேஷன் ஆகியோர் வழிபட்ட சுயம்பு முர்த்தி. ஆதி சங்கரர் பூஜித்து நிர்மாணித்த ஸ்ரீ சக்ரம் அம்மன் சன்னதியில் அமைந்துள்ளது.  சுகப் பிரசவம் நடந்திட அம்மன் அருள் வேண்டி இங்கு உள்ள சிறிய பிரசவ நந்தியிடம் பக்தர்கள் தங்கள் வேண்டுதலைக்கூறி வழிபடுகின்றனர்.

காசியில் இருப்பது போலவே இங்கும் பைரவர் தனது வாகனமான நாய் இல்லாமல் காட்சி அளிக்கிறார்.  ஆண்டுதோறும் பங்குனி 9,10,11 ஆகிய நாட்களில் சூரியக்கதிர்கள் சிவலிங்கம் மீது விழுவதால், சூரிய பகவான் இக்காலத்திலும் சிவனை வணங்கி வருகிறார்.

தேவாரத்தில் வில்வேச்வரம் என்று  கூறப்படும் வைப்புத்தலமாகும்.  கோவில் முழுவதும் எண்ணற்ற கல்வெட்டுக்களும் கலை நயம் மிக்க சிற்பங்கள் கொண்ட தூண்களும் நிறைந்துள்ளன.

1.8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள திருக்குளம் பிரம்மதீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.இத் திருக்குளத்தின் மகிமை வில்லைப்புராணத்தில் மிக  அருமையாக உரைக்கப்பட்டுள்ளது.

1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் திருத்தேர் 67 அடி உயரம் உள்ளது. புதுச்சேரியின் பெரும் புகழ் பெற்ற திருவிழா வில்லியனூர் தேர்த்திருவிழா.
-----

Aboout sixty volunteers reached on the night of 15.09.2012 itself to commence uzhavarappani on Sunday.  Ten more joined us the next day.  Excellent arrangements  for our stay and food were made by Shri N Manoharan, Special Officer cum Executive Officer of the temple.  He deserves a special mention here, as under his instructions, the temple staff also were very helpful and cooperated with us fully in executing our cleaning work

We commenced our work by 6 am, splitting ourselves into various groups to clean the outer praharam of the temple.  It was observed that the abhishega water from inside the temple was stagnating in a pit on the outside, due to its normal outlet getting blocked.  With the help of a lengthy pole, our members cleared the block to drain out the stagnated water.




















Wooden logs from fallen trees were lying scattered in the southern and western side of the outer praharam.  They were removed to a corner and arranged neatly.  One particular piece of a lengthy teak wood log, posed a big challenge and more than a dozen people had to be assigned to lift and remove it.
























After removing the dried leaves and broken twigs from the temple  gardens, weed killer solution was sprayed to prevent unwanted growth of weeds and bushes.  Weeds that were growing on the temple walls were also removed and weed-killer applied.












In the meanwhile, the other groups that were assigned work inside the temple were removing the grime and soot accumulated on the walls and removing cobwebs from the ceiling.  Jet spraying machine was used clean the walls, ceiling, pillars and floor














Lady volunteers cleaned and polished the lamps and vessels used in pooja.  They also cleaned the swami and amman sannidhis.

This historic temple situated in a vast sprawling complex being very big and the size of our work force limited to about 70 only,  we took upon the task of cleaning only certain limited areas of the temple, which we did to the best of our ability and to the satisfaction of the temple authorities.  We are aware that much work needs to be done here.  As all of us had to return to Chennai that night itself, we worked till 2.00pm only.  After finishing lunch, we thanked the E.O. Shri Manoharan for all the excellent arrangements and co-operation extended to us and left the place with the viboothi & kungumam prasadam from the temple.




No comments:

Post a Comment